தந்தைக்கு பிறகு மகன் வருவதற்கு அரசியல் ஒன்றும் தொழில் அல்ல; மந்திரி அஸ்வத் நாராயண்
தந்தைக்கு பிறகு மகன் வருவதற்கு அரசியல் ஒன்றும் தொழில் அல்ல என மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குடும்ப அரசியலுக்கு எதிராக பா.ஜனதா பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு நான் ஆதரவுஅளிக்கிறேன். அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்வதாகும். அரசியல் ஒன்றும் தொழில் அல்ல. தந்தைக்கு பின்பு மகன் அரசியலுக்கு வருவது, தந்தையும், மகனும் அரசியலில் இருப்பது சரியானது அல்ல. தொழிலில் தான் அதுபோன்று இருக்கும். குடும்ப அரசியலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுவாகவே குடும்ப அரசியலை மக்கள் விரும்புவதில்லை. மக்களும் குடும்ப அரசியலுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், பிற மாநில கட்சிகளாக இருக்கட்டும் குடும்ப அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இருக்க கூடாது என்ற பி.எல்.சந்தோசின் கருத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். கட்சி இதுபோன்ற முடிவை எடுத்தால், அதனை வரவேற்பேன். கட்சி என்பது தனி நபருக்கானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.