அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
பெரம்பலூர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால, அதனை எவ்வாறு அணைப்பது, நோயாளிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் செயல்முறைகளை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.