மே தின கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
நாகை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் திருமறைச் செல்வன் வரவேற்றார். இதில் பொதுமக்கள், பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் குறித்து கோரிக்கை அளித்தனர்.
ஆயக்காரன்புலம்
இதேபோல ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தலைமையிலும், வாய்மேட்டில் ஊராட்சி மன்றத்தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலும், ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தியில் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் தலைமையிலும், தகட்டூரில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையிலும், வண்டுவாஞ்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் தலைமையிலும், அண்ணாப்பேட்டை ஊராட்சியில் வனிதா ரவிச்சந்திரன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
சோழவித்யாபுரம்
பஞ்சநதிக்குளம் கிழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வீரதங்கம் தலைமையிலும், பஞ்சநதிக்குளம் மேற்கில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்யாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்செல்வம் தலைமை தாங்கினார்.இதில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிசெல்வன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் வழி கல்வி குறித்தும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும் குடிநீர் பிரச்சினை, 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.