ரேஷன் கடை பணியாளர் பணி இடைநீக்கம்

மதுபோதையில் பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-05-01 20:01 GMT
பொன்னமராவதி, 
பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியபாலன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பணி நேரத்தில் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மதுபோதையில் பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கும் காட்சிகளை சிலர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். மேலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை எடை குறைவாகவும், மண்எண்ணெய் ஊற்றும் போது போதையில் கீழே ஊற்றியதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ரேஷன் கடை பணியாளர் சத்தியபாலனை பணி இடைநீக்கம் செய்து நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்