டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-01 19:59 GMT
குன்னம்
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆறுகளில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், வேப்பூர், பிரிவு பாதை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த டிராக்டரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், டிராக்டரை ஓட்டி வந்தவர் நன்னை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் தேவராஜ் என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேவராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்