அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்
சென்னை ஸ்ரீ ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, தீத்தடுப்பு பற்றி செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.