மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ராஜபாளையம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-01 19:48 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆதியூர் கண்மாய் ஓடைப் பகுதியில் டிராக்டரில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் ஒருவரை மட்டும்  பிடித்து விசாரணை நடத்தியதில் சோமையாபுரம் தெருவை சேர்ந்த பால்பாண்டி (வயது 32) என்பதும், டிராக்டர் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்