பாப்பாரப்பட்டி அருகே காட்டு யானைகள் தாக்கி மாடு செத்தது

பாப்பாரப்பட்டி அருகே காட்டு யானைகள் தாக்கி மாடு செத்தது.

Update: 2022-05-01 18:59 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஞ்சீவபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு கறவை மாட்டை கட்டிவைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் தாக்கியதில் மாடு செத்தது. இது குறித்து சக்திவேல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் பாப்பாரப்பட்டி கால்நடை டாக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து சென்று மாட்டை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்