கம்பைநல்லூர் பேரூராட்சியில் 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

கம்பைநல்லூர் பேரூராட்சியில் 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது.;

Update: 2022-05-01 18:58 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கம்பைநல்லூர், வெதரம்பட்டி, சேக்காண்டஅள்ளி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், செல்வம், கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், கவுன்சிலர்கள் சரவணன், குமுதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்குட்டை கலையரசன் வரவேற்று பேசினார். விழாவில் ஒன்றிய அவைத்தலைவர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன், முன்னாள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் கணேசன், வகுரப்பம்பட்டி சரவணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தாசன், விவசாய அணி நிர்வாகி நடராஜ், மாவட்ட பிரதிநிதி சென்னையன், நகர தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி அறிவானந்தம், நிர்வாகிகள் வேலாயுதம், நாராயணன், போதுமணி, ராஜாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தீனா பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்