கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-05-01 18:57 GMT
கரூர்
கரூர், 
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கரூர் மாவட்ட நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தொடங்கி வைத்தார். இதில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
இதேபோல் சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தலைமையாசிரியர் அன்பு செல்வம் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் பஞ்சவர்ணம் தேர்தல் பார்வையாளராக கலந்துகொண்டார். இதில், உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நச்சலூர்
நெய்தலூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை செலின் ஆஞ்சிலிஸ் மேரி தலைமை தாங்கினார். சேப்ளாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜஸ்டின் திரவியராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மேலாண்மைக்குழு புதிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஒன்றியம் கணக்குவேலம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. பார்வையாளராக கொ.சீத்தப்பட்டி உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பொன்ராஜ் கலந்து கொண்டார். பள்ளியின் தலைமையாசிரியர் வேலுமணி வரவேற்று பேசினார். தொடர்ந்து மேலாண்மை குழு புதிய தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
நொய்யல்
நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமையாசிரியை வசந்தி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மேலாண்மை குழு புதிய தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.




மேலும் செய்திகள்