மத்திகிரி அருகே ஏரியில் பெண் சிசு பிணம்

மத்திகிரி அருகே ஏரியில் பெண் சிசு பிணம் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-01 18:55 GMT
மத்திகிரி:
ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே அச்செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள கரட்டூர் ஏரியில் பிறந்து 10 நாளே ஆன பெண் சிசு உடல் மிதந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் சிசுவை ஏரியில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்