மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2022-05-01 18:52 GMT
கரூர்
நொய்யல், 
தவிட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதிஉலா வந்தார். நேற்று காலை அம்மனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் சர்பம் வாகனத்தில் அக்ரஹாரம் வீதி வழியாக திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்