சம்பள பாக்கியை கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை
ராஜபாளையம் அருகே சம்பள பாக்கியை கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே சம்பள பாக்கியை கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சம்பள பாக்கி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜ்குமார் (வயது 21). இவரது உறவினர் மாடசாமி. இவர், ராஜ்குமாரை ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல்சூளையில் டிராக்டரில் மண் அள்ளும் பணிக்காக அழைத்து சென்றார். இதில் ராஜ்குமார் வேலை பார்த்ததற்கு சம்பளமாக ரூ.1 லட்சம் வரை தர வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆதலால் தனக்கு சம்பள பாக்கியை தரும்படி அவர் பலமுறை மாடசாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாடசாமி, உறவினர்களான கணேஷ்குமார்(28), அவரது தம்பி ஆனந்த்குமார் (27) ஆகியோரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார், ஆனந்த்குமார் ஆகிய 2 பேரும் ராஜ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேத்தூர் போலீசார் இறந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கணேஷ் குமார், ஆனந்த்குமார் ஆகிய இருவரையும் சேத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.