கிராவல் மண் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்
கிராவல் மண் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கறம்பக்குடி,
கறம்பக்குடி பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து கிராவல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி பாலச்சந்தர் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி குமரகுளத்தில் கிராவல் மண் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.