மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.
பொறையாறு:
அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.
கிராம சபை கூட்டம்
செம்பனார்கோவிலில் அறிஞர் அண்ணா ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செம்பனார்கோவில் ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நிவேதாமுருகன், எம்.எல்.ஏ. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன். செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஆணையர் மஞ்சுளா வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் முருகண்ணன் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
கிராமத்தில் என்னென்ன பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை பற்றி தெரியப்படுத்துவது தான் கிராம சபை கூட்டத்தின் நோக்கமாகும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களிடம் சேர வேண்டும். அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.