தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம்

குத்தாலத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-05-01 18:29 GMT
குத்தாலம்:
குத்தாலத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குத்தாலம் முன்னாள் தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். தலைவர் செந்தாமரை, துணைசெயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமலிங்கம் வரவேற்றார். நாகை மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து பேசினார். இதில் அனைத்து உறுப்பினர்களையும்  அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவது,  விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு முடிதிருத்துவோர் விலைப்பட்டியலை உயர்த்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பந்தநல்லூர், ஆலங்குடி, வில்லியநல்லூர், குத்தாலம், அஞ்சாறு வார்த்தலை, திருவாலங்காடு, மல்லியம், தேரழுந்தூர், நச்சினார்குடி, கோமல், ஸ்ரீகண்டபுரம், எஸ்.புதூர், வடமட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் இளவரசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்