திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

Update: 2022-05-01 18:14 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தோப்புச்சேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன்(வயது 56). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(40) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.  இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மணிகண்டன் தகராறு செய்ததுடன் அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகையன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன்  வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்