கண்டாச்சிபுரம் அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கண்டாச்சிபுரம் அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-05-01 18:11 GMT
திருக்கோவிலூர்

கண்டாச்சிபுரம் அருகே உள்ள கணக்கன்குப்பம் கிராமம் பாடிபள்ளம் பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், பொன்னுரங்கம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் 500 லிட்டர் சாராய ஊறல் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் முருகன் மற்றும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்