காமாட்சி மாரியம்மன் கோவில் திருவிழா

காமாட்சி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

Update: 2022-05-01 18:30 GMT
கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே உள்ள, அதங்குடியில், காமாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில், சேவுராயர், அய்யனார் குதிரை விடுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்