அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா

மயிலாடுதுறை கூறைநாடுஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது;

Update: 2022-05-01 18:04 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடந்தது. இதைெயாட்டி நேற்று முன்தினம் காலை கூறைநாடு சிவசுப்பிரமணிய சாமி கோவிலில்  இருந்து பால்குடம், காவடி வீதி உலா புறப்பட்டு கோவிலை அடைந்தது. விழாவில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம், பி்ட்சாண்டவர் ஊர்வலமும், சிவனடியார்களுக்கு அன்னம் அளித்தலும் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீராளன் பிரசாதம் அளித்தல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்