வாலிபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது
வாலிபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை,
சிவகங்கையில் நேற்று முன்தினம் காலையில் பட்டப்பகலில் வசந்த் என்ற வசந்தகுமார் (வயது 22) என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. பலத்த காயமடைந்த வசந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி செல்வம் என்ற கூழப்பன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வம் என்ற கூழப்பனை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.