முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிய வந்தது

Update: 2022-05-01 17:45 GMT
எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது 80). கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள சுடுகாட்டில் பால்சாமி விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த பால்சாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினை காரணமாக பால்சாமி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்