மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி 27-வது வார்டு சுல்தான் மியான்தெரு, அமீனுதீன் தெரு, சின்ன மதர் தெரு பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய மாடு அறுக்கும் தொட்டி, மாட்டு இறைச்சி விற்பனை தடைகளை நகராட்சி நிர்வாகம் மூடி சீல் வைத்தது. இதனைத் தொடர்ந்து மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள்,
கடையை திறந்து மாட்டு இறைச்சி விற்பதற்கு அனுமதி கேட்டனர். அதற்கு நகராட்சி நிர்வாகம் மாட்டு இறைச்சி கடைகளை தூய்மையாக வைத்து, கண்ணாடி பெட்டிக்குள் வைத்து மாட்டு இறைச்சி விற்பனை செய்ய கூறியுள்ளனர். அதன்படி வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நகராட்சி சார்பில் மீண்டும் கடைகளை மூட கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாட்டு இறைச்சி கடை் சங்க தலைவர் அன்பு மற்றும் மாட்டு இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில் நாங்கள் முறையாக உரிமம் பெற்றுள்ளோம். கடந்த 40 நாட்களாக கடைகளை மூடி உள்ளதால் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாட்டு இறைச்சி கடைகள் நடத்துவார்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி உள்ளனர்.