வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Update: 2022-05-01 17:42 GMT
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதாளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பெரிய மாடசாமி மகன் உமையராஜ் (வயது 28). வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பெற்றோர் இனி மேல் ஒழுங்காக வேலைக்கு செல்லவேண்டும் என்று திட்டியதாக கூறப்படுகிறது. மன விரக்தியில் இருந்த உமையராஜ் நேற்று மாலை வீட்டில் படு்க்ைக அறையில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கினார். இதை அறிந்ததும் அவரை கீழே இறக்கி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்