பிளஸ்-2 மாணவி தற்கொலை
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் வேணி (வயது 17). பிளஸ்-2 மாணவியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த வேணி நேற்று அதிகாலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.