கழுகுமலை அருகே 2 வீடுகளில் துணிகர கொள்ளை
2 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்துச்சென்றனர்
கழுகுமலை:
கழுகுமலை அருகே, 2 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்துச்சென்றனர்.
விமானப்படையில் பணியாற்றுபவர்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள காளான்கரைபட்டி வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் பாலகிருஷ்ணன் (வயது 43). இவர் தஞ்சாவூரில் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி காலை பாலகிருஷ்ணன் மனைவி செந்தமிழ்செல்வி குழந்தைகளுடன் கணவரின் ஊரான கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்துக்கு கோவில் கொடைக்கு சென்று விட்டார்.
ெகாள்ளை
அதே ஊரில் உள்ள செந்தமிழ்செல்வியின் மாமியார் ஆறுமுகத்தம்மாள் காலை 10 மணியளவில் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு செந்தமிழ்செல்விக்கு தகவல் கொடுத்துள்ளார்.உடனடியாக செந்தமிழ்செல்வி பன்னீர்குளத்திலிருந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.3 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
மற்ெறாரு வீடு
இதேபோல் காளான்கரைபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி தாஸ் காந்தி மகன் ராமசாமி (43). இவர் கோவையில் குடியிருந்து வருகிறார். அதே ஊரில் உள்ள மான்விழி என்பவர் ராமசாமி வீட்டை பராமரித்து வருகிறார். அவர் கடந்த 30-ந் தேதி காலை 10 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
உடனடியாக வீட்டின் உரிமையாளர் ராமசாமிக்கு மான்விழி தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 1 பவுன் கம்மல், 1 பவுன் மோதிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் மனைவி செந்தமிழ்செல்வி மற்றும் ராமசாமி தாஸ் மகன் ராமசாமி ஆகியோர் கழுகுமலை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.