சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு

சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-05-01 17:09 GMT
அணைக்கட்டு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில்  பள்ளிகொண்டா, அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று வீசியது. லேசான மழை பெய்தது.

 அப்போது கந்தனேரியை அடுத்த வீரப்பன் பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்த புளியமரம் திடீரென சாலையில் சாய்ந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

 இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் சென்று சாலையில் விழுந்த‌ மரக்கிளைகளைவெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்