திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் இன்று திருவண்ணாமலையில் நடந்தது.
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாநில தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் மணிவண்ணன், துணை செயலாளர் நாராயணன், குணசேகரன், மாவட்ட தலைவர் துரைசாமி, பொருளாளர் மோகனரங்கன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அனைத்து அமைப்பு சாரா தொ.மு.ச. செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றார்.
காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருமஞ்சன கோபுர வீதி, கற்பகவிநாயகர் கோவில் திருவூடல் தெரு, பெரியக்கடை வீதி, தேரடி வீதி வழியாக காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது.
இதில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டு பேசினார். ஊர்வலத்தில் மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மின் வாரிய திட்ட செயலாளர் சரவணன் உள்பட மாவட்ட துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட அமைப்பு சாரா துணை செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான மெட்ராஸ் கே.சுப்பிரமணி நன்றி கூறினார்.