மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து சாவு
கட்டுமான பணியில் ஈடுபட்ட மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து சாவு
திருவண்ணாமலை
மேற்கு வங்காளம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் (வயது 23). இவர் திருவண்ணாமலையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் கூலி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த அவர் 2-வது மாடியிலிருந்து கான்கிரீட் போடுவதற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது தவறிக் கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.