மது கடத்தல்; கார் பறிமுதல்- 2 பேர் கைது

வலங்கைமான் அருகே மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2022-05-01 18:45 GMT
வலங்கைமான்:-

வலங்கைமான் அருகே மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். 

காரில் மதுபாட்டில்கள் கடத்தல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் உள்ள நரிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வலங்கைமான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் 12 அட்டைப்பெட்டிகளில் 50 மதுபாட்டில்கள் வீதம் 600 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

2 பேர் கைது

விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் கொட்டையூர் செட்டித்தெரு பகுதியை சேர்ந்த மணி (வயது50), அவருடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. மதுபாட்டில்கள் நீடாமங்கலம் பகுதிக்கு கடத்தி செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.87 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்