தொழிற்சங்கத்தினர் செங்கொடி ஏந்தி மே தின ஊர்வலம்

தொழிற்சங்கத்தினர் செங்கொடி ஏந்தி மே தின ஊர்வலம்

Update: 2022-05-01 16:46 GMT

திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. இதில் செங்கொடி ஏந்தி திரளானவர்கள் பங்கேற்றனர்.
மே தின ஊர்வலம்
திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மே தின விழா ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. அவினாசி ரோடு சி.ஐ.டி.யு. அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. மேன தின விழா ஊர்வலம் தொடங்கியது. இதுபோல் பி.என். ரோடு ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகம் முன் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஊர்வலம் தொடங்கியது. பேண்டு வாத்தியங்கள் முழங்க செஞ்சட்டை வீரர்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். புஷ்பா ரவுண்டானா பகுதியில் இரு தொழிற்சங்க ஊர்வலமும் ஒன்று சேர்ந்து ரெயில்வே மேம்பாலம், குமரன் ரோடு வழியாக அரிசிக்கடை வீதியில் நிறைவடைந்தது. செங்கொடி ஏந்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அரிசிக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் பாலன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சுப்பராயன் எம்.பி., சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்து நெரிசல்
முன்னதாக மாலை 5.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கி அவினாசி ரோடு, பி.என்.ரோடு வழியாக நடந்து 7 மணி அளவில் அரிசிக்கடை வீதியில் நிறைவடைந்தது. இதன்காரணமாக வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன்காரணமாக சுமார் 2 மணி நேரமாக மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்