பொது தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு யாகம்
பொது தேர்வு எழுதும் மாணவமாணவிகளுக்கு சிறப்பு யாகம்
திருப்பூர்:
திருப்பூர் யுனிவர்சல் ரோட்டில் புகழ்பெற்ற சீரடி சாய் பீடம் உள்ளது. இந்த கோவிலில் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொது தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு யாகத்துடன் கூடிய பூஜை நேற்று காலை நடந்தது. அவினாசி ஆதினம் காமாட்சி தாச சாமி தலைமையில் நடந்த இந்த பூஜையில் மாணவ, மாணவிகளின் பெயர், நட்சத்திரம் மற்றும் அவர்களுடைய தேர்வு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மந்திரங்கள் ஓத பிரத்தியேக பூஜை செய்யப்பட்டது.
இந்த சிறப்பு யாக பூஜையில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பீடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம், உதவி தலைவர் ஆனந்தன், செயலாளர் ஏ.சக்திவேல், துணைச்செயலாளர் எஸ்.சக்திவேல், பொருளாளர் செந்தில் நாராயணன் மற்றும் சாய் பீட நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் இந்த பூஜையில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பேனாக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.