அஷ்டலிங்க கோவில்களில் உழவாரப்பணி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உழவாரப்பணி

Update: 2022-05-01 16:36 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன.

 திருவண்ணாமலையில் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வழிபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் அஷ்டலிங்க கோவில்கள், ஆதி அருணாசலேஸ்வரர் கோவில், துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கோவில்களில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் மூலம் உழவார பணி நடைபெற்று வருகிறது.

 இந்த பணியினை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். 

இதன்மூலம் கோவில்களை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மை செய்யும் பணியும், கோவிலில் உள்ள பொருட்கள் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 

இந்தப் பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.

மேலும் செய்திகள்