மச்சிக்கொல்லி பேபி நகர் இடையே சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மச்சிக்கொல்லி பேபி நகர் இடையே சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Update: 2022-05-01 13:19 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சி கொல்லி, மட்டம், பேபி நகர், போஸ்பாரா உள்பட பல இடங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகருக்கு செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மண் சாலையாக இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளை பல்வேறு சிரமங்களுக்கிடையே மழைக்காலத்தில் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர சாலையை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகர் செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தூர சாலை அமைக்கும் முதற்கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் சாலையை அகலப்படுத்தும் பணி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர் யூனஷ்பாபு ஆகியோர் பார்வையிட்டனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது சாலை பணி தொடங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்