ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள்
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 2021-22 ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் ஊட்டி எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்களை ஊக்குவித்து பேசினார். இதை தொடர்ந்து காலையில் தடகள போட்டியும், மதியம் குழு விளையாட்டு போட்டியும் நடந்தது. இந்தப்போட்டியில் 170-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு தனியார் அமைப்பினர் சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.