ஒரகடம் அருகே லாரி மோதி விவசாயி பலி

ஒரகடம் அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-05-01 07:57 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எழிச்சூர் ஊராட்சியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). விவசாயி. இவருடைய நண்பர் கணேசன் (60), துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில், ஒரகடத்தில் இருந்து எழிச்சூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கணேசன் ஓட்டினார். இவர்கள் மோட்டார் சைக்கிளில் எழிச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, வாலாஜாபாத் நோக்கி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கணேசன் படுகாயத்துடன் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீசார், படுகாயத்துடன் கிடந்த கணேசனை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

குமாரின் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்