மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வெல்டர் சாவு - தப்பி ஓடிய டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் வெல்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-05-01 06:05 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ராமலிங்கபுரம், ராமர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் புருஷோத்தமன் (வயது 21). திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மினி லாரியின் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த புருஷோத்தமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரியின் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறனர்.

மேலும் செய்திகள்