மது விற்ற 4 பேர் மீது வழக்கு: 144 மது பாட்டில்கள் பறிமுதல்
திருவள்ளூர் அருகே மது விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த ஒண்டிகுப்பம் மேம்பாலம் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மணவாளநகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து, மணவாளநகர் போலீசார் அந்த டாஸ்மாக் கடை அருகே சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த காளிதாஸ், சேவியர், கந்தசாமி, நாகநாதன் ஆகியோர் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 144 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.