இரும்பு சங்கிலியால் மினி பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த வாலிபர்

ஆவடி பஸ் நிலையத்தில் இரும்பு சங்கிலியால் மினி பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த வாலிபர்

Update: 2022-05-01 05:52 GMT
ஆவடி, 

ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து மிட்டனமல்லி நோக்கி அரசு மினி பஸ்(தடம் எண் எஸ்.43) புறப்பட்டது. பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென கையில் இருந்த இரும்பு சங்கிலியால் மினி பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்தார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். ஆனால் அந்த நபர் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் திடீரென நடுரோட்டில் படுத்து, கால் மேல் காலை போட்டு படுத்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் இன்பென்ட் ராஜ் (வயது 33) என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம் அளிக்கும் அவர், சாலையேரம் வசித்து வருவதும் தெரிந்தது. இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்