பொதுமக்கள் தேவைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி, ‘வாட்ஸ் அப்’ எண் -தாம்பரம் மாநகராட்சி மேயர் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சி பொதுமக்கள் தேவைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி, ‘வாட்ஸ் அப்’ எண்ணை தாம்பரம் மாநகராட்சி மேயர் அறிவித்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், பொதுமக்கள் பூங்கா பராமரிப்பு, குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய மேயர் வசந்தகுமாரி, “தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். பொதுமக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 425 4355, ‘வாட்ஸ்அப்’ எண் - 8438353355 மற்றும் tambaramcorpgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தங்களது தேவைகளை தெரிவிக்கலாம்” என்றார்.