சேலத்தில் தனியார் மில்லில் மைதா வாங்கி ரூ.7 லட்சம் மோசடி

சேலத்தில் தனியார் மில்லில் மைதா வாங்கி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-04-30 23:07 GMT
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் கடந்த ஆண்டு மே மாதம் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரிசாட் என்பவர் 25 ஆயிரம் கிலோ மைதா வாங்கினார். இதற்காக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மட்டும் செலுத்தினார். மீதமுள்ள ரூ.7 லட்சத்து 14 ஆயிரம் செலுத்தவில்லை. இதையடுத்து பாக்கி பணத்தை அவரிடம் தனியார் மில் நிர்வாகிகள் கேட்டனர்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மில்லின் இயக்குனர் சுபாஷ் (வயது 63) என்பவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து ரிசாட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்