சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-30 22:40 GMT
சேலம்:
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதை கட்டுப்படுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மண்டல செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செங்கோடன், ஜவகர், கோவிந்தன், மாதையன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற .சிலர் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்