அரசு பள்ளியில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

அரசு பள்ளியில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நடந்தது.

Update: 2022-04-30 22:35 GMT
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கங்காதேவி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். பாரதிதாசன் குறித்து தமிழ் ஆசிரியர் ராமலிங்கம், பாவை சங்கர் ஆகியோர் பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி கலந்து கொண்டு திருக்குறள் எழுதுதல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற தேவதர்ஷினி, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற பிளஸ்-2 மாணவி காயத்ரி, தேசிய வாக்காளர் தினத்தில் மாவட்ட அளவில் நடன போட்டியில் வெற்றி பெற்ற சிவவிஷ்ணு குழுவினர், மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பிளஸ்-1 வகுப்பு மாணவி உஷாராணி ஆகியோருக்கு சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை பரிசாக வழங்கி பாராட்டினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி ஆய்வாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா செய்திருந்தார். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்