தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 92). இவர், தனது மகன் குருநாதன் என்பவரோடு வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற கிருஷ்ணமூர்த்தி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் குருநாதன், தா.பழூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகிறார்.