பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மனைவி கைது; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலம்

பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மனைவி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-30 22:10 GMT
பெங்களூரு:

ஆந்திராவை சேர்ந்தவர் சங்கர் ரெட்டி (வயது 35). இவர் பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.கே. நகரில் மனைவி டெல்லி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சங்கர் ரெட்டி தனியார் நிறுவனத்தில் கணக்காளராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கர் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இந்த நிலையில் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தனது தாலி சங்கிலியை பறிக்க முயன்றதாகவும், அதை தடுத்ததால் கணவர் சங்கர் ரெட்டியை மர்மநபர்கள் கொலை செய்ததாகவும் டெல்லி ராணி புகார் அளித்தார்.

  ஆனாலும் டெல்லி ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ராணியின் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரித்த போது தந்தையும், தாயும் சண்டை போட்டதாக கூறியது. இதன்பின்னர் டெல்லி ராணியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது டெல்லி ராணிக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், இதற்கு சங்கர் ரெட்டி இடையூறாக இருந்ததால் அவரை கத்தியால் குத்தி டெல்லி ராணி கொலை செய்ததும் தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்