தக்கலை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

தக்கலை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் தஞ்சமடைந்தார்.

Update: 2022-04-30 21:13 GMT
பத்மநாபபுரம், 

தக்கலை அருகே உள்ள கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் ஷிவானி (வயது19). சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று காலையில் கல்லூரிக்கு சென்ற ஷிவானி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கணடுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். 

இந்தநிலையில் ஷிவானி நேற்று முன்தினம் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபிஷ் என்ற வாலிபருடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்கள் போலீசாரிடம்,  தாங்கள் பல ஆண்டுகளாக கதலித்து வருவதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு கூறினர்.

இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்தனர். ஆனால் இருவரும் திருமண வயதை அடைந்ததால் காதல் ஜோடியை போலீசார் சேர்த்து வைத்து அனுப்பினர். 

மேலும் செய்திகள்