பஸ் நிலைய கடைகள் இடித்து அகற்றம்
பாவூர்சத்திரம் பஸ் நிலைய கடைகள் இடித்து அகற்றப்பட்டது.
பாவூர்சத்திரம்:
நெல்லை-தென்காசி நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் தென்காசி-நெல்லை நெடுஞ்சாலையின் வடபுறம் சுமார் 10 கடைகள் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு உள்ளே வருவதால், இந்த கடைகள் இடித்து அகற்றும் பணி நேற்று முதல் தொடங்கியது.