ஏ.ஐ.டி.யு.சி., நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-30 19:38 GMT
திருச்சி, மே.1-
ஏ.ஐ.டி.யு.சி., நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நேற்று அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். தலைவர் நேருதுரை முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் கார்த்திகேயன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை மேலும் காலம் தாழ்த்தாமல் பேசி முடிக்கவேண்டும். மகளிர் இலவச பயணத்திற்கான பேட்டாவை டிரைவர், நடத்துனருக்குவழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு6ஆண்டுகளாகநிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாம்தமிழர் கட்சி
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இரா.பிரபு தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் த.பிரபு முன்னிலை வகித்தார். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் முன்பு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தி குறைத்திட மத்திய மாநில அரசகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் நேசம்ஜோசப் சிறப்புறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பபட்டது.
டாஸ்மாக் ஊழியர்கள்
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கிற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு மதுபானங்கள் துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதை கண்டித்தும், போனஸ் தொகையை குறைத்ததை கண்டித்தும். டாஸ்மாக் வருமானம் தொடர்பாக உரிய வெள்ளை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்