காரைக்குடி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
காரைக்குடி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்
காரைக்குடி,
தேவகோட்டை ரஸ்தாவிற்கும் கல்லலுக்கும் இடையே நாகவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு, கை கால் எலும்புகள் முறிந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் பச்சை கலரில் கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார்.
இவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இது குறித்து காரைக்குடி ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.