ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

ஆரணி துணை ேபாலீஸ் சூப்பிரண்டாக வி.கே.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்.

Update: 2022-04-30 18:07 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டாக வி.கே. ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பு வேலூர் மாவட்ட குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி மாறுதலில் வந்துள்ளார்.

ஏற்கனவே ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோட்டீஸ்வரன் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றலாகி சென்று விட்டார்.

மேலும் செய்திகள்